×

ஆடி மாசம் பிறந்தாச்சு…. பருவமழையும் துவங்கியாச்சு…வறண்ட வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுமா?.. விசாயிகள் எதிர்பார்ப்பு

நிலக்கோட்டை: வறண்ட வைகையில் கரைபுரளுமா வெள்ளம் ஆடி பிறந்ததால் ஆவலுடன் விவசாயிகள், சாரலுடன் துவங்கிய பருவ மழையால் இந்த ஆண்டும் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் வானம் பார்த்த பூமி என்பதால் வறட்சியை தாங்கி வளரக்கூடிய மல்லிகை, கனகாம்பரம், முல்லை, வாடாமல்லி, கோழிகொண்டை உள்ளிட்ட பூக்கள், கத்தரி,வெண்டை, பாகற்காய், புடலங்காய், அவரை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் சப்போட்டா, மா உள்ளிட்ட பழவகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதே தாலுகாவில் நேர் எதிராக தென்பகுதியில் செல்லும் வைகை ஆறு மற்றும் முல்லை பெரியார் கால்வாய் பாசனம் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த தாலுகாவின் பெரும்பகுதியில் மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் கம்பு, சோளம், துவரை போன்ற மானாவாரி பயிர்களே அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறந்தாலே இப்பகுதி விவசாயிகள் மும்மூரமான விவசாய ஆயத்த பணிகளில் இறங்கி விடுவர். அதேபோல இந்த ஆண்டு கோடை மழையும் சராசரியாக பெய்துள்ளதால் வழக்கமான ஆயத்தப் பணியில் அதிக அளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி சவுந்தரபாண்டி கூறுகையில்:
நிலக்கோட்டை பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக இருந்தாலும் தாலுகாவின் தென்பகுதி முழுவதும் வைகை ஆறு மற்றும் முல்லைபெரியார் பாசன கால்வாய் மூலம் ஆயிரக்கணக்கான நெல் சாகுபடி செய்ய வருகிறோம். ஆனால் ஆடிப்பட்டத்தில் தேடி வைத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்ற கூற்றுக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிறந்தாலே இப்பகுதி விவசாயிகளுடைய புதுவித உத்வேகத்துடன் விவசாய பணிகளை துவங்குவது வழக்கம்.

அதேபோல இந்தாண்டும் இன்று முதல் ஆடி மாதம் பிறந்தும், கடந்த மூன்று மாதங்களாக போதிய மழையின்றி வைகை அறிலும் முல்லை பெரியார் பாசன வாய்க்காலிலும் தண்ணீர் போக்குவரத்து முற்றிலும் நின்று நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது. ஆனாலும் கடந்தாண்டு போலவே இந்த ஆண்டும் ஆடி மாதம் பிறந்த முதல்நாளே சாரலுடன் கூடிய பருவமழை துவங்கியுள்ளதால் ஆடியில் தொடங்கும் விவசாயம் அற்புத மகசூலை தரும் என்பது போல இப்பகுதி விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்’’என்றனர்.

The post ஆடி மாசம் பிறந்தாச்சு…. பருவமழையும் துவங்கியாச்சு…வறண்ட வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுமா?.. விசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Audi Maasam ,SALKOTA ,Karaipuraluma ,Dry Vai ,Saral ,Audi ,Maasam ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டை அருகே நள்ளிரவில்...